கொழும்பில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு !

0
64

கொழும்பு − கிராண்பாஸ் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

இந்த கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபரினால் அடகு வைக்கப்பட்ட வானொலி பெட்டியை மீளப் பெற்றுக்கொள்ள சென்ற வேளையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கிராண்பாஸ் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, எரிபொருள் நிலையமொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் சாரதி நடுவீதியில் குத்தி கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.