உள்நாட்டு தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம்

0
60

உள்நாட்டு தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என சேவை வழங்குநர்கள் தொழில்நுட்ப அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வினால் இது தொடர்பான சேவைகளின் கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் உள்நாட்டு அழைப்பு மற்றும் இணைய கட்டணங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என சேவை வழங்குநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.