இலங்கை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம்!

0
61

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு,எரிவாயு நெருக்கடி, மின்சார தடை ஆகியன காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதுடன், பெரும் சவாலாக மாறியுள்ளதுடன், அந்நிய செலாவணியும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை நல்ல நாடு, நல்லவர்களும் உள்ளனர்.இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் எங்களை அழைக்கிறது.ஆனால் இங்கு எரிபொருள் இல்லையென நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்காவிலிருந்து வெளியேறி வாடகைக்கு முச்சக்கர வண்டியை அமர்த்தி இலங்கையின் அழகைப் பார்க்கத் திட்டமிட்டேன்.கடந்த 21 ஆம் திகதி நுவரெலியாவிற்கு வந்த நான் 22 ஆம் திகதி எல்ல பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தேன்.

கட்டுநாயக்காவிலிருந்து முச்சக்கர வண்டியில் செல்லும் இடமெல்லாம் பெற்றோலை வாங்குவதற்காக முச்சக்கரவண்டியில் பிளாஸ்டிக் போத்தலை வைத்திருப்பேன். தற்போது கிடைக்கும் பெற்றோலைக் கொண்டு முடிந்தவரை முச்சக்கரவண்டி செல்கின்றது, ”என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் அந்நிய செலவாணியை ஈட்டும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாவுக்கு சிறந்த நாடு எனும் சிறப்புரிமையை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.