நீர்த்தேக்கங்களின் குறைவடைந்துள்ள நீர்மட்டம்!

0
302

மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளதாக மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் ஏற்பட்டுள்ள இந்நிலைமை காரணமாக நாட்டின் நீர்மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, காசல்ரீ, மவுஸ்ஸகலே, சமனல வெவ, கொத்மலை, விக்டோரியா மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், நாட்டின் நீர்மின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படும்.

இதேவேளை, நாட்டில் மின்சார உற்பத்தியை பாதித்த எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினையில் இலங்கை ஏற்கனவே போராடி வருகிறது.

இது தினசரி அண்ணளவாக 7 மணிநேர மின்வெட்டுக்கு வழிவகுத்துள்ளது.

தற்போதுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நீர் மின் உற்பத்தியையே நம்பியிருப்பதாக அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.