அழிவின் விளிம்பிற்குள் நாடு! ஜனாதிபதியின்நடவடிக்கைகளே காரணம்

0
281

நாட்டின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் வளங்கள் வழங்கப்படாது எனவும் வழங்கப்பட்டவை திரும்ப பெறப்படும் எனவும் கூறியது அபத்தமானது என முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இவர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திலும் அமைச்சராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நாட்டின் தற்போதை பொருளாதார நெருக்கடி தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக வரிகளை இரத்துச் செய்திருக்கக் கூடாது. வரிகளை இரத்துச் செய்ததன் காரணமாக நாட்டுக்கு ஒரு ட்ரில்லியன் அதாவது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.இப்படியான அபத்தனமான நடவடிக்கைகள் காரணமாக நாடு அழிவின் விளிம்பிற்குள் விழுந்துள்ளது எனவும் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.