வீட்டில் வளர்ப்பு நாய் தாக்கியதில் 17 மாத பெண் குழந்தை உயிரிழப்பு!

0
74

வீட்டில் வளர்ப்பு நாய் தாக்கியதில் 17 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள செயின்ட் ஹெலன்ஸின் பிளாக்ப்ரூக் பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்த்த நாய் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளான குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இந் நாய், குடும்பத்தினரால் ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கப்பட்டுள்ளதாக Merseyside பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் பொலிஸாரினால் நாய் கொல்லப்பட்டுள்ளதுடன் நாயின் மீது சோதனைகளை மேற்கொள்வார்கள் எனவும் நாய் சட்டவிரோத இனமா என்பதைப் பார்க்கவும், அதன் முந்தைய உரிமையாளர்களை அடையாளம் காணவும் முயற்சிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தாக்குதலின் போது அப்பகுதியில் எதையும் நேரில் பார்த்தவர்கள் அல்லது நாய் பற்றி தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.