நாடாளுமன்றம் செல்லும் பேருந்து சேவையின் பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளது!

0
61

பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மக்களினால் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சத்தினால் நாடாளுமன்றம் செல்லும் பேருந்து சேவையின் பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாடாளுமன்றில் கடமையாற்றி வரும் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் காணப்படும் பெயர்ப் பலகைகளே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

“நாடாளுமன்ற பணியாளர்கள்” என இந்த பேருந்துகளின் பெயர்ப் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் பணியாற்றி வரும் பணியாளர்களைப் போக்குவரத்து செய்வதற்காக மொத்தமாக ஒன்பது பேருந்துகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஒன்பது இடங்களிலிருந்து இந்த பேருந்துகள் நாடாளுமன்றம் நோக்கிப் பயணம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.