சீனாவில் பயணிகள் விமானம் விபத்து!

0
77

சீனாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான சீன ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 132 பேர் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், விமான விபத்து அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், மீட்பு பணிகளை முடுக்கி விடமும் தேடுதல் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஸி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,