ரஷ்யா உடனான பேச்சு வார்த்தை தோல்வி : மூன்றாம் உலகப் போரிட்க்கான அடித்தளம் இதுவே ஸெலென்ஸ்கி தெரிவிப்பு

0
313

உக்ரைன் ஜனாதிபதி உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அது “மூன்றாம் உலகப் போரை” குறிக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சிஎன்என் செய்திச்சேவையுடன் இடம்பெற்ற உரையாடலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நேரடியாக பேச தாம் தயாராக இருப்பதாக கூறிய அவர், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைகள் மட்டுமே என்று தாம்; நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.எனினும் ரஷ்யாவின் ஆதரவுடனான பிரிவினைவாத பிராந்தியங்களை சுதந்திரமாக அங்கீகரிக்கும் எந்த உடன்படிக்கையையும் தாம் நிராகரிப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

தனது நாடு நேட்டோ உறுப்பினராக இருந்திருந்தால், இந்த போர் ஆரம்பித்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நேட்டோ உறுப்பு நாடுகள், உக்ரைனை தமது கூட்டணியில் பார்க்கத் தயாராக இருந்தால், அதை உடனடியாகச் செய்யவேண்டும்” ஏனென்றால், மக்கள் தினந்தோறும் இறக்கின்றனர் என்றும் ஸெலன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார். 

ரஷ்யாவின் ஆதரவுடனான பிரிவினைவாத பிராந்தியங்களை சுதந்திரமாக அங்கீகரிக்கும் எந்த உடன்படிக்கையையும் தாம் நிராகரிப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.