மூன்று ஆண்டுகள் உக்ரைனியர்களுக்கு தற்காலிக மனிதாபிமான விசா வழங்கும் அவுஸ்திரேலிய அரசு

0
422
After fleeing heavy fighting between the Sudan Armed Forces and the Sudan Peoples Liberation Army, thousands of the Internally Displaced Persons, receive the rations of emergency food aid, distributed by the World Food Programme.

அவுஸ்திரேலியாவுக்கு வரும் உக்ரைனிய அகதிகளுக்கு மூன்று ஆண்டுகள் தற்காலிக மனிதாபிமான விசா வழங்குவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இந்த விசாவை கொண்டு உக்ரைனியர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கலாம், வேலைச் செய்யலாம், மற்றும் மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவச் சிகிச்சை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை உக்ரேனியர்களுக்கு 5 ஆயிரம் விசாக்களை வழங்கியுள்ள நிலையில், அதில் 750 உக்ரைனியர்கள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்திருக்கின்றனர்.

அதே சமயம், எத்தனை உக்ரேனிய அகதிகளை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு இந்த கட்டத்தில் தான் ஒரு வரம்பை நிர்ணயிக்கவில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியிருக்கிறார்.

புதிதாக அவுஸ்திரேலியாவுக்குள் வரும் உக்ரைனியர்களுக்கு உதவ உக்ரேனிய அவுஸ்திரேலிய சமூகத்துக்கு நேரடியாக 4.5 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா.வின் கணக்குப்படி, உக்ரைனிலிருந்து சுமார் 32 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருக்கின்றனர். மேலும் 64 லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.