புடின் தோல்வி அடைவாரா? கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

0
358

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோலியடையும் என கனடா அறிவித்துள்ளது. இந்த போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமில் புடின் தோல்வியடைவார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், 15வது நாளாக போர் நீடித்துள்ளது. இரு நாட்டு படையினரும் கடுமையாக போராடி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் காரணமாக உக்ரைனில் இருந்து பொது மக்கள் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரியுள்ளனர். இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் முன்னணி நிறுவனங்களும் ரஷ்யாவிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக போரை தொடங்கிய பயங்கரமான தவறை செய்துள்ளார்.

இந்த போரில் அவர் தோல்வி அடைவார். தங்கள் பிரதேசத்தை பாதுகாக்க உக்ரேனிய மக்களின் மூர்க்கத்தனமும் வலிமையும் உறுதியும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.