இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளசுகாதார நிபுணர்கள்!

0
357

தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்காக சுகாதார அமைச்சு சுமார் 1 பில்லியன் ரூபா கடனைச் செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை சுகாதார அமைச்சுக்கான மருத்துவப் பொருட்களை வழங்குவதை நிறுத்துவதற்கு அந்நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக ஆய்வுகூட சோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

ஆய்வுகூட சோதனைகளுக்கு பதில் கிடைக்காததால் ஏற்கனவே சில சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் சுகாதார அமைச்சு சில மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.