வீதி விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழப்பு!

0
70

காலி, அஹங்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பெண் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

லொறியை இடது பக்கமாக முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த பெண் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளார்.

முச்சக்கரவண்டியில் மோதயதையடுத்து மோட்டார் சைக்கிள், லொறியில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.