ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் சீனா ! பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென சீன தூதர் கிங் ஆங் தெரிவிப்பு

0
70

ரஷ்யாவுடன் சீனா நல்ல நட்புறவை விரும்புவதாக அமெரிக்காவிற்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு சீனா பொருள் உதவி வழங்கினால், அந் நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானுடன், சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனும் அழைப்பு விடுத்துள்ளது.

இந் நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அந் நாட்டிற்கான சீன தூதர் கிங் ஆங், ரஷ்யாவிற்கு எதிராக சீனா தெரிவிக்கும் கண்டனம் போரை தடுக்க உதவாது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மற்றும் தூதர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மட்டுமே சீனா வலியுறுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ரஷ்யாவுடன் அண்டை நாடு என்ற முறையிலும் நட்பு ரீதியிலும் உறவுகளை சீனா விரும்புவதாகவும், ரஷ்யாவுடன் வர்த்தகம், பொருளாதாரம், நிதி, எரிசக்தி துறைகளில் சீனாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.