மட்டக்களப்பில் கேரள கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது!

0
67

மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரி ஒருவரை 200கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீட்டை சம்பவதினமான நேற்று காலை 11 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட   வியாபாரியை 200 கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.