நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்த தயாராகி வரும் முக்கிய அமைச்சர்!

0
74

நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் இந்த வார கூட்டத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் விசேட உரையை நிகழ்த்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அமைச்சர் கடந்த காலத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டவர் என்பதுடன் இதன் காரணமாக அரசாங்கத்தின் பிரதானிகளுடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளவர் என கூறப்படுகிறது.

இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் நாடாளுமன்றத்திற்குள் மற்றுமொரு சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்த அந்த அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல பிரச்சினைகள் காரணமாக அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

View Post