சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வது என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்!

0
69

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடத்தவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வது என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி இந்த சர்வக் கட்சி மாநாட்டை நடத்தவுள்ளதுடன் மாநாடு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

நாளை மறுதினம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.