சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்த மனோ கணேசன்!

0
73

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பைக் கவனமாகப் பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்து கொள்வதில்லை எனத் தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாகக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைத் திருப்திப்படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணிக் கட்சியாக நாம் கணிக்கிறோம்.

பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதலபாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பைக் கவனமாகப் பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்து கொள்வதில்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.