அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள சுகாதார அமைச்சு!

0
69

அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிர்காக்கும் வண்டிகளை எரிபொருளிற்காய் காக்க வைக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மக்கள் தேவைக்கு அதிகமான எரிபொருள்களை கான்களில் கொள்வனவு செய்து வருகிறார்கள்.

இதனால் கான்களில் எரிபொருள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.