ரஷ்ய ஜனாதிபதி புதின்”கொலைகார சர்வாதிகாரி” என கூறிய ஜோ தெரிவித்ததை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.

0
440

ரஷ்ய ஜனாதிபதி புதின்”கொலைகார சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து இருப்பது தனிப்பட்ட முறையில் அவமானபடுத்தும் செயல் என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று செயின்ட் பேட்ரிக் தின விழாவில் உரையாற்றிய அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு அத்துமீறி போர் புரியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை போர் குற்றவாளி என அறிவித்தார்.

ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு செயலுக்கு ஜனாதிபதி புதின் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என்றும், உலகில் விலைவாசி உயர்ந்து இருப்பதற்கும் ஜனாதிபதி புதினின் இந்த போர் நடவடிக்கைகளே காரணம் என குற்றம் சாட்டினார்.

மேலும் உக்ரைனின் மீது போரை முன்நகர்த்தும் ரஷ்ய ஜனாதிபதி புதின் கொலைகார சர்வாதிகாரி எனவும், குண்டர் எனவும் விமர்சித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி பைடனின் விமர்சனம் ஜனாதிபதி புதின் மீதான தனிப்பட்ட அவமதிப்பு என ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ், ஜனாதிபதியின் எரிச்சலூட்டும் கருத்து, அவரது சோர்வு மற்றும் மறதியின் காரணமாக இத்தகைய ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிட வைக்கிறது எனவும் அதன் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்கம் எங்களை பாதிக்கத்தவரை நாங்கள் எந்த ஒரு மதிப்பீட்டிற்கும் செல்ல மாட்டோம் என தெரிவித்தார்.

மேலும் உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் , உக்ரைன் அரசே இழுத்து அடிப்பதாகவும், ரஷ்யா விரைவில் தீர்வுகாண முயல்வதாகவும் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா “global sheriff” செய்யப்பட முயல்வதாக குற்றம்சாட்டினார்.

மேலும் மேற்கு நாடுகளை சார்ந்து இருப்பது போன்ற மாயையில் இருந்து ரஷ்யா வெளிவந்து விட்டதாகவும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளை ரஷ்யா விரைவில் பரிசீலிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.