உக்ரைன் விவகாரம் முடிவை எட்டாது… கோபமடைந்த விளாடிமிர் புடின்!

0
396

உக்ரைன் மீதான படையெடுப்பு சரிவடைந்தால், அடுத்ததாக கொடூரமான தாக்குதலுக்கு விளாடிமிர் புடின் உத்தரவிடலாம் என இராணுவ வட்டாரத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரம் முடிவை எட்டாதது விளாடிமிர் புடினுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் உக்ரைனில் இறப்பு என்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரித்தானியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் தலைவர் Lt Gen Sir Jim Hockenhull அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

உக்ரைன் படையெடுப்பு இதுவரை சாதமான முடிவுக்கு வராத நிலையில், புடின் கடுமையான முடிவுகளை எடுக்கக் கூடும் எனவும், இதனால் உக்ரைனில் ஆள் அபாயம் அதிகம் ஏற்படுவதுடன், நாட்டின் உள்கட்டமைப்பு மொத்தமாக சின்னாபின்னமாக்கப்படும் எனவும், மனிதாபிமான நெருக்கடியை தீவிரப்படுத்துவதற்கும் அதிக வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், உக்ரைன் நகரங்களில் தொடர் குண்டுவீச்சுக்கு புடின் உத்தரவிட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்ட பாதுகாப்பு செயலர் பென் வாலஸ், சோவித் ஒன்றியம் முன்னெடுத்த போர் யுத்திகளை இனிவரும் நாட்களில் புடின் உக்ரைன் மக்கள் மீது பயன்படுத்தலாம் என்றார்.

மேலும், பீரங்கி தாக்குதலை உக்கிரப்படுத்தவும் அதனால் உக்ரைன் நகரங்கள் மண் குவியலாக மாறும் எனவும் பிரித்தானிய இராணுவ தரப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதற்கான அவகாசம் அவர்களுக்கு அளிக்காமல் இருப்பதும், பீரங்கி அணிவகுப்பை சிதைப்பதும் பலனைத் தரலாம் என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, போலியான குண்டுகளை வீசி அப்பாவி பொதுமக்களை அச்சமூட்டி, அவர்களை பதுங்கியுள்ள பகுதியில் இருந்து வெளியேற வைத்து தாக்குதல் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

இரண்டாவதாக இரசாயன தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுக்கலாம் எனவும், சிரியாவில் அந்த நாட்டு மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்றாவதாக, அண்டை நாடுகள் அல்லது உக்ரைன் ஆதரவு நாடுகளை தூண்டிவிட்டு போரில் ஈடுபடுத்தவும் புடின் முயற்சி மேற்கொள்ளலாம் என பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.

நான்காவதாக, அணுஆயுதம் அல்லது உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தும் சூழலும் உருவாகலாம் என குறிப்பிட்டுள்ள பென் வாலஸ், உக்ரைன் படையெடுப்பு துவங்கிய சில நாட்களிலேயே விளாடிமிர் புடின் அதற்கும் தயாரான நிலையில் தான் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.