யாழ். கந்தரோடையில் புத்தர் சிலை! விரைந்து சென்ற சுமந்திரன்

0
85

யாழ். கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுகின்றது என அப்பகுதி இளைஞர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் (M. A. Sumanthiran) முறையிடப்பட்டதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்று நிலைமையினை ஆராய்ந்துள்ளார்.

இன்றைய தினம் குறித்த இடத்திற்கு வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் ஊடாக அழைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதுடன் அங்கு நின்றிருந்த பௌத்த மதகுருவிடம் இது தொடர்பில் வினவியிருந்தார்.

குறித்த சந்திப்பின் போது அதிகளவான இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்ததாக அங்கிருந்தவர்களால் அவதானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.