மீண்டும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள்!

0
82

புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு மீண்டும் உருவாகும் சாத்தியக் கூறுகள் இன்னும் நிலவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா எனும் நோய் நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பதுவன்துதாவ(Ranjith Batuwantudawa) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சு நிறுவிய இலக்கில் 53 விதமானவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.