நீர் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை-நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை !

0
66

நீர் கட்டணத்தை அதிகரிக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடமாக நீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

கொவிட் தொற்று தொடங்கியவுடன், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களின் மதிப்பு ரூ.7 பில்லியனைத் தாண்டியுள்ளதாக நீர்வள அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை மின் கட்டணத்தை அதிகரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.