உக்கரனை எளிதாக கைப் பற்றலாம் என தப்புக்கணக்கு போட்ட புடின்: பயந்து பதுங்கும் ரஷ்ய வீரர்கள்

0
85

எட்டு ஆண்டுகளுக்கு முன் கிரீமியாவைப் பிடித்துக்கொண்டது போல, தெனாவட்டாக உக்ரைனுக்குள் நுழைந்து இப்போதும் எளிதாக அதைக் கைப்பற்றிவிடலாம் என கனவு கண்ட புடின் தப்புக்கணக்கு போட்டுவிட்டது போல் தெரிகிறது.

அப்படியெல்லாம் எங்கள் நாட்டை எடுத்துக்கொள்ளமுடியாது, ஒரு அடி நிலம் கூட விட்டுத் தரமாட்டோம் என கெத்தாக எதிர்த்து நிற்கிறது உக்ரைன்.

போதாக்குறைக்கு கிடைத்த ரஷ்ய படையினரை எல்லாம் துவம்சம் செய்கிறார்கள் உக்ரைன் வீரர்கள்.

தன் பக்கம் இழப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதும், டாங்குகளை சிதறடிப்பதுமாக உக்ரைன் வீரர்கள் துணிச்சலாக ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

அவ்வகையில், உக்ரைன் வீரர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்த, தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோம் என டாங்குகளுக்குப் பின்னால் ரஷ்ய வீரர்கள் பதுங்கும் காட்சி வெளியாகியுள்ளது.