மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் நிதி அமைச்சரே பொறுப்பு -உதய கம்மன்பில தெரிவிப்பு!

0
346

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் நிதி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் எனமுன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (udaya gammanpila) தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கு மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வது சவாலாக மாறியுள்ளது.

நேற்றைய தினம் (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் அதிகளவில் பணம் அச்சிட்டமை உள்ளிட்ட காரணங்களால் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், டீசல், எரிவாயு, மருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு 20.6 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவாகும் இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக கூடிய இறக்குமதி செலவாகும். இதில், 4.6 பில்லியன் டொலர் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக செலவிடப்பட்டது.அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சுமார் 6 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து கோருவது போல் அத்தியாவசியமற்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டால், எரிவாயு மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் டொலர் இல்லாமல் கடலில் நிற்காது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.