பள்ளி மதிய உணவுத் திட்டம் அதி ஆபத்தில்! இனி முட்டையும் இல்லை

0
336

நாட்டின் தற்போதைய பணவீக்க நிலைமை காரணமாக சுமார் ஒரு மில்லியன் மாணவர்கள் பயன்பெறும் ‘பள்ளி மதிய உணவுத் திட்டம்’ அதிக ஆபத்தில் உள்ளது.

சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கல்வி அமைச்சகம் அனுமதித்துள்ளது.

செய்முறையை மாற்ற சுகாதார அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உணவு வழங்குனர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு 100 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த தொகையை அதிகரிக்குமாறு  அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தும் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.

அதன்படி, சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து உணவு முறையில் மாற்றம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.