சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற சமாதான யாத்திரை

0
305

இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலான சமாதான யாத்திரை இன்று அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் இடம் பெற்றது.

அம்பாறை – நிந்தவூரில் ஆரம்பமான சமாதான யாத்திரை அக்கரைப்பற்று, திருக்கோவில் ஊடாக பொத்துவில் உகத்தை வரை இடம் பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், கிறித்தவ, சிங்கள மக்களிடையே நல்லிணக்க சமாதானத்தை மேம்படுத்தும் நோக்கில் சமாதானத்துக்கும் சமூகப்பணிக்குமான அமைப்பு ஏற்பாடு செய்த யாத்திரை இன்று காலை அக்கரைப்பற்று நகரை வந்தடைந்து.

இந்த யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் “நல்லிணக்கத்துக்காக ஒன்றிணைவோம்” எனும் தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து யாத்திரையைத் தொடர்ந்தனர். இதில் அம்பாறை,கல்முனை,சாய்ந்தமருது,காரைதீவு பிரதேச நல்லிணக்க குழுக்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். 

இங்கு அமைப்பின் அம்பாறை மாவட்ட திட்டப்பணிப்பாளர்-ரி.ராஜேந்திரன் மற்றும் அமைப்பின் அக்கரைப்பற்று இணைப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் மற்றும் உறுப்பினர் அசோக்கா ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.