அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை !

0
494

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், யுகதனவி ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியை மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று  முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக கொழும்பு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்துடன் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் தற்போது பலவந்தமாக அரச தலைவர் செயலகத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளதையடுத்து, குறித்த பகுதியில்  பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.