அரசாங்கத்திற்கு எதிராகமக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்:மக்கள் ஆவேசத்துடன் கருத்து!

0
597

அரசாங்கத்திற்கு எதிராக கட்சி அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுக்காது மக்களாக கிளர்ந்து எழ வேண்டும். அப்போதுதான் ஒரு புரட்சி வெடிக்கும். துனிசியா, எகிப்து, ஈராக் போல புரட்சிகள் வெடிக்கும் என மக்கள் ஆவேசத்துடன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு தட்டுபாடு தொடர்பில் எமது செய்திச்சேவை மக்களின் கருத்துக்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது. 

எனவே இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள், 

ஜனாதிபதியின் உரையை கேட்கும் போது எவ்வித பயனும் இல்லாமல் இருக்கின்றது. மூன்று வேளை சாப்பிட வேண்டாம் ஒரு வேளை சாப்பிடுங்கள் என்பது போல உள்ளது. ஆனால் எங்களுக்கு அதற்க கூட வழி இல்லாமல் இருக்கிறது.

நாளை எந்த கட்சி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவையும், அமெரிக்காவையும் வைத்துதான் அவர்கள் செயற்பட வேண்டும். அதை விடுத்து இந்தியாவிற்கு இதை தர மாட்டேன், அமெரிக்காவிற்கு இதை தரமாட்டேன் என சொல்லி பயனில்லை. சீனாவிற்கு மட்டும் வழங்கும் போது வாயை மூடிக்கொண்டு இருந்தார்கள்.  ஆனால் இப்போது விளங்கியிருங்கும்.

சாப்பாட்டிற்கு, எரிபொருளுக்கு என எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கின்றோம். இப்போது வரிசை இல்லாத வாழ்க்கையே இல்லை. 69 இலட்சம் மக்களிடம் நாங்கள் கேட்க விரும்புவது “தென் செபதே” மட்டும் தான்.

ஒரு தலைவருக்கு தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். ஆனால் சரியான நிர்வாகம் இன்மையே இதற்கு காரணம். இப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கு அப்போதே சென்றிருக்காலம் என்றவாறு நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.