யாழ்ப்பாணத்தில் ஒரே வாரத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

0
85

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 700 ரூபா என தெரியவருகிறது. 

எனினும் இந்த வார ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டிருந்தது.

அத்துடன் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் இந்த வார ஆரம்பத்தில் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவாகியிருந்தது. 

இலங்கையில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைய ஆரம்பித்ததை தொடர்ந்தே தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாடும் கடும் பொருளாதார நெருக்கடியை அடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.