நாட்டில் இன்று நீண்ட நேர மின்வெட்டு!

0
79

நாட்டில் இன்று மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியில் 1 மணிநேரமும், பிற்பகல் 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களும் மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,