நாட்டின் முதலாவது சூழல் நேய சுற்றுலா வலயமாக சீகிரியா

0
64

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீனற்ற நாட்டின் முதலாவது சுற்றாடல் நேயமிக்க சுற்றுலா வயலமாக சீகிரியா இந்த வருடம் பெயரிடப்படவுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, மத்திய கலாசார நிதியம், வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சிகிரியாவைப் பார்வையிடச் செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சீகிரியா

சிகிரியாவை அண்மித்த பகுதியில் உள்ளக விமான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.