துரோகிகளிடமிருந்து நாடு சுத்தப்படுத்தப்படவேண்டும் என ஆக்ரோஷத்துடன் புடின் கடும் எச்சரிக்கை!

0
64

உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என சாடியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த புடின் கூறுகையில், உக்ரைன் மீதான போருக்கு பலா் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். இது தேசத் துரோகமாகும் என கூறியுள்ளார்.

துரோகிகள் யாா், தேசப் பற்றுள்ளவா்கள் யாா் என்பதை யாராலும், குறிப்பாக ரஷ்யா்களால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும். தவறி வாயில் நுழைந்துவிட்ட கொசுவைப் போல் துரோகிகளை ரஷ்யா்கள் வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும், அவர்கள் களையெடுக்கப்பட வேண்டும்.

மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக போா் எதிா்ப்பாளா்கள் செயல்படுகிறாா்கள். ரஷ்யாவின் அழிவைத் தவிர அந்த நாடுகளுக்கு வேறேந்த நோக்கமும் இல்லை. நமது நாட்டின் வலிமை, ஒருமைப்பாடு, எந்தச் சவாலையும் எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டுமென்றால் துரோகிகளிடமிருந்து நாடு சுத்தப்படுத்தப்படவேண்டும் என ஆக்ரோஷத்துடன் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான போருக்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷ்யா்களே கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தி வரும் நிலையிலேயே புடின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்மூலம் சொந்த நாட்டு மக்களே போரை எதிர்த்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்பதையே புடினின் பேச்சு உணா்த்துவதாக பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

சமீபத்தில் கூட ரஷ்யத் தொலைக்காட்சியில் செய்தி நேரலையின்போது ஒரு பெண் செய்தியாளா் போருக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகையைக் காட்டி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.