ஜேர்மனியில் கொரோனா விதிகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம்: இன்று முதல் அமுலாக்கம்

0
102

இன்று வெள்ளிக்கிழமை, தொற்று பாதுகாப்புச் சட்டம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

அத்துடன், இந்த வார இறுதியில், ஒரு வார கால விவாதத்திற்குப் பின், பழைய தொற்று பாதுகாப்புச் சட்டம் காலாவதியாகும் நிலையில், புதிய விதிகள் அமுலுக்கு வருகின்றன. இந்த விதிகள் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.

பொதுவாகப் பார்த்தால், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களிலும், பொதுப்போக்குவரத்திலும் மாஸ்க் அணிதல், பள்ளிகளிலும் முதியோர் இல்லங்களிலும் கொரோனா பரிசோதனை முதலான சில கட்டுப்பாடுகள் மட்டுமே தொடர்ந்து அமுலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா சுகாதார பாஸ் தேவை விலக்கிக்கொள்ளப்பட உள்ளது.

என்றாலும், புதிய தொற்று பாதுகாப்புச் சட்டம், சில குறிப்பிட்ட இடங்களில், தொற்று அதிகரிப்பதைப் பொருத்து, அல்லது புதிய வகை மாறுபாடு ஒன்றைக் கட்டுப்படுத்துவதற்காக, கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய அனுமதிக்கிறது. அப்போது, உணவகங்கள், மதுபான விடுதிகள் முதலான இடங்களில் மீண்டும் 2G அல்லது 3G கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம்.

இந்த வார இறுதியுடன் அலுவலகக் கட்டிடங்களுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் காலாவதியாகும் நிலையில், நிலைமையைப் பொருத்து, பணி வழங்குவோரே என்னென்ன கட்டுப்பாடுகளை தொடர்வது என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.

அமுலுக்கு வர இருக்கும் மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், மாகாணங்கள் என்ன வேகத்தில் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்ய உள்ளன என்பதை தாங்களே முடிவு செய்துகொள்வதற்காக, ஏப்ரல் 2ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களுக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.