ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ள ஹர்ச டி சில்வா!

0
96

ஜனாதிபதி நாட்டில் நிலவும் நெருக்கடி குறித்து முன் கூட்டியே அறிந்திருந்தார் என்றால், ஏன் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தைகளை நடத்த தாமதமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, ஜனாதிபதியிடம கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

கடனை திரும்ப செலுத்தும் முறைமையை உருவாக்க சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவது என ஜனாதிபதி எடுத்த முடிவை பாராட்டினாலும் தற்போது எடுத்த இந்த முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால், மக்கள் இவ்வாறு கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டிருக்காது. நெருக்கடி ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து இருந்ததாக ஜனாதிபதி கூறுகிறார்.

இதன் காரணமாக வாகன இறக்குமதியை நிறுத்தி, அந்நிய செலாவணியை சேமிக்க நடவடிக்கை எடுத்ததாக கூறினார். நெருக்கடி ஏற்படும் என்பது ஜனாதிபதிக்கு முன்கூட்டியே தெரியும் என்றால், அரசியல் பிரபலத்தை பெறுவதற்காக பெரியளவில் வரிகளை குறைத்து வருடம் ஒன்றுக்கு கிடைக்க வேண்டிய 600 பில்லியன் வருமானத்தை ஏன் இல்லாமல் ஆக்கினார்?.

இதன் உலகில் குறைந்த அரச வருமானத்தை ஈட்டும் இலங்கை போன்ற நாட்டின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ரூபாயை மிதக்க விட்டால், ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் எனவும் அதன் மூலம் சந்தையில் ஏற்படும் பற்றாக்குறை குறைக்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி கூறுவது போல், நெருக்கடியை முன் கூட்டியே அறிந்திருந்தார் என்றால், ரூபாயை செயற்கையாக கட்டுப்படுத்தும் ஆலோசனையை ஏன் வழங்கினார்?.

ஆரம்பத்தில் சுமார் நான்கு பில்லியன் டொலர் வருமானத்தை நாடு இழந்து என்பதை ஜனாதிபதி அறிவாரா?. ரூபாயின் பெறுமதியை பாதுகாக்க சுமார் 1.5 பில்லியன் டொலர் வரை இழக்க நேரிட்டது. அத்துடன் ரூபாயின் பெறுமதியை செயற்கையாக கட்டுப்படுத்தியதால், நாடு 2.5 பில்லியன் அந்நிய செலாவணி வருமானத்தை இழந்தது.

இதன் காரணமாக அந்நிய செலாவணி நெருக்கடி நீடித்துச் சென்றது. நாட்டுக்காக இந்த சந்தர்ப்பத்தில் மின்சாரத்தையும் எரிபொருளையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நீங்கள் கேட்கின்றீர்கள்.

எரிபொருளை சிக்கமான பயன்படுத்து எப்படி இருந்த போதிலும் மக்கள் சிறிதளவு எரிபொருளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் உள்ளனர். அத்துடன் அதிகமான விலையில் எரிபொருளை கொள்வனவு செய்து, அதனை மக்கள் வீணாக பயன்படுத்துவார்கள் என்று எண்ணுவது தவறு.

அத்துடன் மின்சாரமும் எரிபொருளும் பொருளாதார பயணத்தின் சக்திகள். வாடகை வாகனத்தை ஓட்டும் மனிதர் எப்படி எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த முடியும்?.

அப்படியானால், அவர் வாடகைக்கு வாகனத்தை ஒட்டுவதை குறைத்துக்கொண்டோ, தேசத்தை கட்டியெழுப்ப உதவ முடியும். அப்படியானால், அந்த நபரின் பொருளாதாரம் பாதிக்கப்படும். எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது என்பது பொருளாதாரத்தின் வீழ்ச்சி எனவும் ஹர்ச டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.