சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாத இலங்கை அரசு

0
102

சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை கடனை செலுத்த முடியாத நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21ஆம் திகதி செலுத்த வேண்டிய தவணை கடன்களை தற்போதைய சூழலில் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக இலங்கை சீன வங்கிகளிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன அபிவிருத்தி வங்கிக்கு 53.596 மில்லியன் டொலர்களும், சீனா Exim வங்கிக்கு 17 மில்லியன் டொலர்களும், 386.19 மில்லியன் யுவான்களும் அதே நாளில் இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. எனினும் அதனை அன்றைய தினம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.