உக்ரைனில் நாடக அரங்கில் விமான தாக்குதல் ! டசின் கணக்கான குழந்தைகளும் மக்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

0
63

உக்ரைனில் நாடக அரங்கம் ஒன்று ரஷ்ய விமான தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

குறித்த நாடக அரங்கத்தில் ரஷ்ய தாக்குதலுக்கு பயந்து டசின் கணக்கான சிறார்களுடன் சுமார் 1,200 உக்ரைன் குடிமக்கள் பதுங்கியிருந்துள்ளனர்.

குறித்த தகவல் உக்ரைன் செய்தி ஊடகம் ஒன்று தவறுதலாக வெளியிட, அடுத்த 20 நிமிடங்களில் ரஷ்யா வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில், டசின் கணக்கான குழந்தைகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி, சிறார்கள் என அந்த அரங்கத்திற்கு வெளியே எச்சரிக்கை கருதி எழுதப்பட்டிருந்தும், ரஷ்ய விமானிகள் அதை பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.

குறித்த நாடக அரங்கமானது ரஷ்ய துருப்புகளால் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான மரியுபோல் நகரில் அமைந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள், உயிர் தப்பியவர்கள், மீட்கப்பட்டவர்கள் என்பது தொடர்பான உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.