இலங்கை சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு! இலங்கையுடன் பேச்சு!

0
68

இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலான திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்படவுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

தாம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய சந்திப்பின்போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு பல தரப்புகளும் வலியுறுத்தியபோதும், கோட்டாபய உட்பட்ட இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து வந்தமை குறிப்பிட்டத்தக்கது.