அமெரிக்க துணை ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றி வந்த சப்ரினா சிங் பணி நீக்கம்

0
63

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுடன் பணியாற்றிய 9 ஊழியர்கள் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் துணை செய்தித்தொடர்பாளராக பணியாற்றி வந்தவர் சப்ரினா சிங். தற்போது அவர் அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்ற செல்வதால், துணை செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதத்தில், ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போதே, கமலா ஹாரிஸ் அணியில் பணியாற்றி வருகிறார் சப்ரினா சிங். கமலா ஹாரிஸ் அணியில் இருந்து விலகிய 9 ஊழியர்களும் துணை ஜனாதிபதி மீது தனிப்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் பணியில் சிரத்தையின்மை காரணமாகவே விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஊழியர்களின் நிர்வாகக் குளறுபடிகளால் ஜனாதிபதி அலுவலகத்திற்கும் துணை ஜனாதிபதி அலுவலகத்திற்கும் நெருக்கடியான சூழலும் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க துணை ஜனாதிபதியின் அலுவலகமானது தேவைக்கேற்ப 50 ஊழியர்கள் வரையில் பணியில் அமர்த்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.