ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைப்பு! கொத்து தயாரிப்பதாக எச்சரிக்கை

0
298

நாடு பூராகவும் அமைந்திருக்கும் சிற்றுண்டிச்சாலைகளின் பீங்கான் பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு வந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைப்பதுடன் உணவக பொருட்களை கொண்டு வந்து, விறகு அடுப்பில் கொத்து தயாரிப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமையல் எரிவாயு இன்மையால் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வசதிகளை நாளை முதல் முற்றாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிற்றுச்சாலைகளை மூடிவிடவேண்டிய நிலை ஏற்பட்டால் சுமார் 5 இலட்சம் பேரின் தொழில் இல்லாமல்போகும் அபாயம் உள்ளது.

அதனால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மற்றும் அதில் பணி புரியும் ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை வழங்க வேண்டும்.

எரிவாயு பிரச்சினை காரணமாக இன்று வரை சுமார் 5000 திற்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

வீடுகளில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஆயிரக்கணக்கானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.