இலங்கையில் மோசமான நிலைமை: முழு உலகத்திற்கும் கூறிய யூடியூப் பிரபலம்

0
292

இலங்கைக்குள் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை பயணத்தை இடையில் கைவிட்டு வெளியேறுவதாக பிரபல யூடியூப்பரான கென் ஹெப்ரோட் (Ken Abroad) தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் வலையெளி தளம் ஊடாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கைக்குள் பயணம் செய்வது மிக மோசமான நிலைமையாக மாறி வருகிறது எனவும் இதன் காரணமாக தான் தனது பயணத்தை இடைநிறுத்து விட்டு, இலங்கையில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தினமும் சுமார் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அது தனக்கு மட்டுமல்லாது நாட்டிற்குள் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்குள் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் அவர் தனது வலையெளி தளத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்துள்ளார். Ken Abroad உலகம் முழுவதும் பயணம் செய்து, உலகில் பல இடங்களை தனது யூடியூப் காணொலிகள் மூலம் பிரபலப்படுத்தி வருபவர்.

அவர் உலக நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது, தான் பயணம் இடங்கள் தொடர்பில் சிறப்பாகவும் நேர்மறையாகவும் விடயங்களை கூறி தனது பார்வையாளர்களை கவர்ந்து வந்துள்ளதுடன் இம்முறை இலங்கை தொடர்பில் அவர் எதிர்மறையான விடயங்களை முன்வைத்து காணொலியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.