வைரஸைக் கொல்லக்கூடிய விசேட தொப்பியா?

0
61

இலங்கையில் கோவிட் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தி வைரஸைக் கொல்லக்கூடிய விசேட தொப்பி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விசேட இரசாயனங்கள் பயன்படுத்தி இந்த தொப்பி தயாரிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன எதிர்ப்புத் தொப்பியைப் பயன்படுத்தினால், தலை, கழுத்து மற்றும் நெற்றியில் தொற்று ஏற்படுவது தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் காற்றுப்பாதையில் நுழையும் அபாயத்தை இந்த தொப்பி குறைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியு்ளளார்.

கோவிட் மாத்திரமின்றி ஆபத்தை ஏற்படும் எந்த வகையான வைரஸாக இருந்தாலும் அதனை இந்த தொப்பி கட்டுப்படுத்திவிடும் என அவர் கூறியுள்ளார்.

இதனை அணிந்து அலுவலகத்திற்கு சென்று மேசை மீது வைத்து விட்டாலும் வைரஸ் நெருங்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இதனை சந்தைக்கு விநியோகிக்க மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே மேலும் தெரிவித்துள்ளார்.