வதந்தி உண்மைக்கு புறம்பானது,பதவிஇராஜினாமா தொடர்பில்மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

0
63

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூறியதாக எழுந்துள்ள தகவல் பொய் என்று அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில், கப்ரால் கடன் மறுசீரமைப்பிற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதை மறுத்தல், வெளிப்படையான தகவல்தொடர்பு இல்லாமை அல்லது அரச தலைவருக்கும் மத்திய வங்கியின் தலைவருக்கும் இடையில் பிளவு போன்ற காரணங்களால் அரச தலைவர் இவ்வாறு தெரிவித்து இருக்கலாம் எனும் வதந்தி உண்மைக்கு புறம்பானது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அவர் மேற்கொள்ள இருக்கும் சந்திப்பு கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக இல்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அரச தலைவர் நேற்று மாலை தனது உரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.