யாழ்.மானிப்பாய் பகுதியில் சிக்கிய முக்கிய குற்றவாளி!

0
72

யாழ்.மானிப்பாயை சேர்ந்த தனு ரொக் என்பவர் மானிப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (16-03-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த கைது சம்பவத்தின் போது அவரது வீட்டில் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மானிப்பாயில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி எரிப்பு உட்பட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்துவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.