யாழ். சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நகையும், பணமும் திருட்டு

0
64

யாழ். சுழிபுரம் – பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு நகையும் பணமும் களவாடப்பட்டுள்ளது.

நேற்றிரவு குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்களின் கழுத்தில் வாளினை வைத்து மிரட்டி ஒரு பவுண் சங்கிலி, அரைப்பவுண் தோடு, அரைப்பவுண் மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருட்டு சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.