மின் துண்டிப்பால் தப்பிச் சென்ற நடிகர்! பொலிஸார் வலைவீச்சு

0
62

பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் ஒருவரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் அவரை தீவிரமாக தேடிவருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் மினுவாங்கொட பிரதேசத்தில் பாலியல் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நாடக நடிகை ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த நடிகரை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அறிந்துள்ளனர்.

குறித்த விடுதி மேலாளரிடம் இருந்தும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். குறித்த நடிகர் தொலைக்காட்சி நாடகஙகளில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் நடிகைகளை இந்த இடத்திற்கு அழைத்து வந்து மேலாளரின் துணையுடன் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடிகர் பொதுவாக பொலிஸ் வேடங்களில் நடிக்கும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது குறித்த பகுதியில் மின் துண்டிக்கப்பட்டமையால் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.