தண்ணீர் அருந்திய சிங்கம்! விடாமல் துரத்தி துரத்தி முத்தம் கொடுத்த ஆமை

0
87

கம்பீரமான சிங்கம், வயதான காலத்தில் தளர்ந்து நடக்கும்போது அதனை சீண்டாதே விலங்குகளே இருக்காது. ஒரு காலத்தில் ஒற்றைப் பார்வையில் ஓடவிட்ட சிங்கம், கண்ணருகே வந்து வாலாட்டும் விலங்குகளை வயதான எதுவும் செய்யாது. காரணம், அதுவே நாடி நரம்புகள் தளர்ந்து உணவுக்கு வழியில்லாமல் தண்ணீரைக் குடித்துக் கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கும். அப்படியான சிங்கங்களை சில விலங்குள் சீண்டும்போது, பார்ப்பவர்களுக்கே ஒருவிதமான பரிதாபம் மேலோங்கும்.

தண்ணீர் அருந்தும் சிங்கம்

குறிப்பாக, ஓநாய்கள் வயதான சிங்கங்களை சுற்றி வளைத்து வேட்டையாடும் வீடியோக்கள் காண்போரை கலங்க வைக்கும். ஆனால் இன்று இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில், ஆமை ஒன்று சிங்கத்தை துரத்தி துரத்தி முத்தம் கொடுக்கிறது. டிவிட்டரில் இந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வயதாகி இருக்கும் சிங்கம், குளம் ஒன்றில் தண்ணீர் குடிக்க வருகிறது. மெதுவாக தண்ணீரை பருகும்போது தண்ணீருக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் ஆமை, சிங்கத்தின் அருகே பயப்படாமல் சென்று முத்தம் கொடுக்கிறது.