ஜனாதிபதிக்கு நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் பற்றி புரிதல் கிடையாது;லக்ஸ்மன் கிரியல்ல தெரிவிப்பு

0
77

நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு போதியளவு புரிதல் கிடையாது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நாடு பற்றிய போதியளவு புரிதல் இல்லை என்பது நேற்றைய தினம் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலிருந்து புலனாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மேலும் அழிவுப் பாதையில் நகர்த்தாது, தங்களுக்கு விருப்பமான தரப்பினரிடம் நாட்டை ஆட்சி செய்வதற்கான பொறுப்பினை ஒப்படைக்க மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான உரையில் பிரச்சினைகள் எவற்றுக்கும் தீர்வு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முற்று முழுதாக தோல்வி அடைந்துள்ளது என்பது ஜனாதிபதியின் உரையின் மூலம் மேலும் மேலும் உறுதியாகின்றது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.