சிக்ஸ்பேக் வைக்க போராடும் ஈழப்பெண் நடிகை லொஸ்லியா!

0
130

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து எப்படியாவது எதாவதொரு கதாபாத்திரம் கிடைத்து நடித்துவிட வேண்டும் என்ற கணவோடு வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் வெளிநாட்டில் இருந்து கூட சின்னத்திரை தொலைக்காட்சிகள் கலந்து கொண்டு பிரபலமாகுவார்கள்.

அப்படி இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி, அதன்பின் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த ஈழப்பெண் தான் லொஸ்லியா. தன் நண்பர்கள் உதவியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பினை பெற்று வீட்டிற்குள் சென்றார் லொஸ்லியா.

நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த லொஸ்லியா தன் அழகான தமிழ் பேசும் குரலால் மக்களை ஈர்த்து வந்தார். காதல் சர்ச்சையில் சிக்கி தன் தந்தையின் கோபத்தை சந்தித்தார். அதன்பின் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கணவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் கமிட்டாகினார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சில மாதங்களில் லொஸ்லியாவின் தந்தி மரணமடைந்தார். தந்தை மரணத்திற்கு பிறகு சில காலம் குடும்பத்துடன் இருந்துவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பிரண்ட்ஷிப் படத்திற்கு தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் பிக்பாஸ் நடிகர் தர்ஷனுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். அப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லொஸ்லியா தற்போது உடற்பயிற்சியில் தீவிரமானபயிற்சி செய்து வருகிறார். சிக்ஸ்பேக் எப்படியாவது வைக்க வேண்டும் என்று தலைகீழாக அவர் செய்த உடற்பயிற்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery
Losliya Mariyanesan